A festival that strikes strangely

Advertisment

திருவிழாவில் இரண்டுதரப்பினர் மோதிக்கொண்டனர் என்பது போன்ற செய்திகள்அவ்வப்போது வெளியாவது வழக்கம். ஆனால் திருவிழாவே இரண்டு தரப்பு மோதிக் கொள்வதுதான் என்பதைப்போன்றநூதனத் திருவிழா இமாச்சல பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம் தாமி பகுதியில் ஒரு குறிப்பிட்ட கிராம மக்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களால் தாக்கிக் கொள்கின்றனர். பல நூற்றாண்டுகளாக இப்படி திருவிழா நாளின் பொழுது இரு தரப்பினர் கற்களை வீசி மோதிக்கொள்வது வாடிக்கையாம். காரணம் காளியை குளிர்விப்பதற்காக இந்த திருவிழா நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.

பக்தர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொள்கின்றனர். உடலில் வலியும் இரத்த துளிகளை காளிக்கு அளிக்கப்படும் காணிக்கை எனக் கருதப்படுகிறது. இப்படி பல நூற்றாண்டுகளாக இரு தரப்பினரும் திருவிழா அன்று மோதிக் கொள்வது வினோதமாக இருக்கிறது. முன்னதாக நரபலி என்ற ஒன்று இருந்த நிலையில் அதற்கு மாற்றாக உயிர் போகாத வண்ணம் இருதரப்பு மோதிக் கொண்டு ரத்தம் வர வைப்பது என்ற நோக்கில் இந்த திருவிழாவானது வினோதமாக நடைபெற்று வருகிறது.