கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் பினராயி விஜயன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதில் குறிப்பாக நாட்டிலேயே இளம் வயது கொண்ட கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக்கி இளம் பெண்களின் நம்பிக்கை நாயகனாக மாறினார். அதுபோல் தனது மந்திரி சபையில் பெண்களுக்கு முக்கியத்துறைகளை கொடுத்து பெண்கள் மத்தியில் பேசப்பட்டார்.
இந்த நிலையில், கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு பெண் ஆட்சியர்களை நியமித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கேரளா வரலாற்றில் 10 பெண் ஆட்சியர்கள் ஒரே நேரத்தில் மாவட்டத்தில் ஆட்சி செய்வது இது தான் முதல் முறையாகும்.
இதில் தலைநகரமான திருவனந்தபுரத்துக்கு நவ்ஜிரோத் கோஸ, கொல்லம் அக்ஷனா பர்வின், பத்தனம்திட்ட திவ்யா எஸ் நாயர், ஆலப்புழ ரேணு ராஜ், கோட்டயம் ஜெயஸ்ரீ, இடுக்கி ஷிபா ஜோர்ஜ், திருச்சூர் ஹரிதா வீ குமார், பாலக்காடு முன்மயி ஜோஷி, வயநாடு கீதா, காசா்கோடு பந்தாரி சுங்கத்ரண்வீர் சந்த் ஆகியோர் ஆவார்கள். மேலும் எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்கள் மீதி உள்ளன.
இதில் கொல்லம் ஆட்சியர் அக்ஷனா பர்வின் கணவர் ஜாஹர் மாலீக் எர்ணாகுளம் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-8_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-9_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-6_10.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-5_13.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-4_27.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-3_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-2_30.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th-1_46.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-03/th_44.jpg)