Female pilot lost their life after boyfriend not eating non-vegetarian food

உத்தரப்பிரதேச மாநிலம் காரக்பூரைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி(25). இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வந்தார் பணி நிமித்தமாக மும்மையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். சிருஷ்டி துலி டெல்லியில் விமானியாக பயிற்சி பெற்றபோது, டெல்லியைச் சேர்ந்த ஆதித்யா பண்டிட்(27) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து மும்மையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சிருஷ்டி துலி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிருஷ்டி துலியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில், சிருஷ்டி அசைவ விரும்பியாக இருந்துள்ளார். ஆனால் அவரது காதலன் ஆதித்யா பண்டிட் அவரை அசைவம் சாப்பிடக்கூடாது என்று கூறி அடிக்கடி சண்டை போட்டு அவரை அடித்துத் துன்புறுத்தியும், பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த சிருஷ்டி துலி வீட்டில் உள்ள அறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இதையடுத்து காதலன் ஆதித்யா பண்டிட் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அதன்பின்பு கஷ்டடியில் எடுத்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.