Advertisment

அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது பெண் சரமாரி தாக்குதல்

Female patient beats up doctor in Delhi government hospital

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண் மருத்துவரைத்தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

டெல்லி ஜஹாங்கீர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் சிவம்குமார் யாதவ். இவர் வழக்கம் போல் நேற்று முன் தினம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். அப்போது தனது உறவினருடன் பெண் ஒருவர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏற்கனவே அங்குகூட்டம் அதிகமாகஇருந்ததால் மருத்துவர் சிவம்குமார் அந்த பெண்ணைவரிசையில் நிற்கும்படி கூறியுள்ளார்.

Advertisment

இதனால் மருத்துவர் சிவம்குமார் யாதவிற்கும் ,அந்த பெண்ணிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இந்த தகராறு முற்றவே சண்டை பெரிதாகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்ணும், அவருடன் வந்த உறவினரும் மருத்துவர் சிவம்குமாரை சரமாரியாகத்தாக்கியுள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மருத்துவரை தாக்கிய பெண் மற்றும் அவரது உறவினர் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Delhi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe