ஹரித்துவாரின் சாலையோரத்தில், குட்டி நாய்க்குட்டி ஒன்று தனது தாயை இழந்த பரிதவிப்பில், அழுதபடி திரிந்து கொண்டிருந்தது. அந்த சின்னஞ்சிறிய நாய்க்குட்டி கதறி அழுததைக் கண்டு தாள முடியாத பெண் குரங்கு ஒன்று 3 நாட்களாக அந்த நாய்க்குட்டியை தன்னுடன் வைத்து பாலூட்டியும் பராமரித்தும் வந்துள்ளது.

Advertisment

Advertisment

வனத்துறையினரோ, குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை மீட்க முயன்றனர். ஆனாலும் அந்த நாய்க்குட்டி, குரங்கை தனது தாயாகவே நினைத்து, குரங்குடன் வளர்ந்து வந்தது. யார் கூப்பிட்டும் அவர்களிடம் செல்ல மறுத்த நாய்க்குட்டிக்கு, குரங்கு தாவும்போது காயம் ஏற்படும் என கருதிய வனத்துறையினர், கஷ்டப்பட்டு நாயை குரங்கிடம் இருந்து மீட்டு பெண் ஒருவரிடம் வளர்க்கச் சொல்லி ஒப்படைத்தனர்.