நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதற்கு ஆதரவு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சி தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ராமாபாய் பரிகார் என்ற பெண் சட்டமன்ற உறுப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அதிரடி காட்டியுள்ளார்.