Advertisment

தேர்வெழுதச் சென்ற மாணவிகளுக்கு ஆடைகிழிப்பு! - போராட்டத்தில் குதித்த பெற்றோர்!

தேர்வெழுதுவதற்காக சென்றிருந்த மாணவிகளின் ஆடைகளை, மேற்பார்வையாளர்கள் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

students

பீகார் மாநிலம் முஷாப்பர்பூரில் இன்று காலை பாராமெடிக்கல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் கலந்துகொள்வதற்காக ஏராளமான மாணவிகள் அங்கு சென்றிருந்தனர். அப்போது, தேர்வறைக்குள் நுழைந்த மாணவிகளின் ஆடைகளில் கைப்பகுதியை, மேற்பார்வையாளர்கள் வலுக்கட்டாயமாக கிழித்துள்ளனர். அவ்வாறு கிழிக்கப்பட்ட பிறகே மாணவிகளை தேர்வெழுதவும் அனுமதித்துள்ளனர்.

Advertisment

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் அழுதபடி கூற, அங்கு மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இருப்பினும், தங்களுக்கு வந்த சுற்றறிக்கையின் படியே ஆடைகளைக் கிழித்ததாகவும், பல மாணவிகள் விருப்பத்துடன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு தேர்வெழுதுவதாகவும் மேற்பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகமுஷாப்பர்பூர் நகரின் கல்வித்துறை அதிகாரி, மாணவிகளுக்கு உடைக்கட்டுப்பாடு குறித்து முன்னரே தெரிவித்திருந்தோம். அதைப் பின்பற்றாத மாணவிகளின் ஆடைகளே கிழிக்கப்பட்டன. இருந்தாலும், யாரும் இதுதொடர்பாக புகாரளிக்கவில்லை என அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

Entrance Exam Bihar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe