ADVERTISEMENT

மின்சார சட்டத்திருத்த மசோதாவின் அம்சங்கள்! 

08:39 PM Aug 08, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதா என்ன சொல்கிறது? எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

தொலைத்தொடர்புத் துறையில் இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி சேவைகள் ஒவ்வொரு பகுதியிலும் பல நிறுவனங்களால் வழங்கப்படுவதைப் போல, மின்துறையிலும் நடைபெற புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா வழிவகை செய்கிறது. போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும், குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

மின் சலுகைகளை அளிக்கும்போது, மானியத்தை மாநில அரசுகள் மின் விநியோக நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் அளிக்க வேண்டும் என்று சட்டத்திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியத்தின் சுமையை மின்சார விநியோக நிறுவனங்கள் மீது சுமத்துவதைத் தடுக்க இந்த மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதைத் தவிர, மின்சார உற்பத்தி, தேசிய அளவில் மின்சார விநியோகம், மாநிலங்களுக்கான ஒதுக்கீடு, மின்சார விற்பனை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்துதலிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, மின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மின் விநியோகத்தையும் தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயிகளுக்கு கிடைக்கும் மின்சாரம் மற்றும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள் ரத்து செய்யப்படும் என்பதும், மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே மின்சார விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் தனியார் வசம் மின் விநியோகம் உள்ளது.

இந்த நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT