Advertisment

கோவாக்சினுக்கு அனுமதி மறுத்த அமெரிக்கா; இந்திய தடுப்பூசி திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? - நிதி ஆயோக் விளக்கம்! 

niti aayog member

இந்தியாவில் கரோனாபரவல் தற்போது குறைந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில்இன்று செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால்,செரோசர்வே குறித்தும், கோவக்சினுக்கு அமெரிக்கா அவசரகால ஒப்புதலை மறுத்திருப்பது குறித்தும் பதிலளித்தார்.

Advertisment

செரோசர்வே என்பது நாட்டில் எத்தனை பேருக்கு கரோனாவிற்கெதிரான ஆன்டிபாடிக்கல் உற்பத்தி ஆகியுள்ளது என்பதையே கணக்கெடுப்பதாகும். இந்த ஆய்வு குறித்து டாக்டர் வி.கே பால் கூறும்போது, "தேசிய செரோசர்வேக்கான தயாரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர் இந்த மாதத்தில் அடுத்த செரோசர்வேக்கான பணிகளைத் தொடங்கும். ஆனால் நமது மக்களை பாதுகாக்க விரும்பினால், நாம் தேசிய செரோசர்வேயை மட்டும் சார்ந்து இருக்க கூடாது. செரோசர்வேக்களுக்கு மாநிலங்களையும் ஊக்குவிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும் அவரிடம் அமெரிக்கா, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால அனுமதியைதர மறுத்தது தொடர்பாக கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ஒவ்வொரு நாட்டின் (மருந்து) ஒழுங்குமுறை அமைப்பிலும் பொதுவான சில விஷயங்கள் இருக்கலாம். சில விஷயங்கள் வேறுபடலாம். நாங்கள் அதை மதிக்கிறோம். விஞ்ஞான கட்டமைப்பானது ஒன்றே ஆனால் அதன் நுணுக்கம் சூழலுக்கு ஏற்ப இருக்கும். இவை அனைத்தும் விஞ்ஞான ரீதியான பரிசீலனைகள். நுணுக்கம் வேறுபட்டிருக்கலாம். தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கவேண்டாமென்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.நாங்கள் அதை மதிக்கிறோம்" என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், நமது (கோவாக்சின்) உற்பத்தியாளர்கள் அவர்களின் விதிமுறைகளுக்கு இணங்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது நமது சொந்த தடுப்பூசிதிட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நமது மருந்து கட்டுப்பாட்டாளர் கோவக்சினுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் பாதுகாப்பு மற்றும் கட்டம் 3 சோதனை குறித்து எங்களிடம் நிறைய தரவுகள் உள்ளது. அவர்களின் மூன்றாம் கட்ட சோதனையின் வெளியீடு 7-8 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் செய்யப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

covaxin NITI AAYOG
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe