கடவுளுக்காக தனது 4 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

jodhpur

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் நவாப் அலி குரேஷி. இவர் கடந்த சில மாதங்களாக இயல்புக்கு மாறாக செயல்பட்டு வந்துள்ளார். தனக்கு பேய் பிடித்துள்ளதாகவும், கடவுளின் உதவியோடு தன்னை மீட்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு குரேஷி குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது குரேஷியின் மனைவி கீழே இறங்கிவந்து பார்த்தபோது, அங்கு அவரது நான்கு வயது மகள் ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் குரேஷிதான் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

காவல்துறையினரிடம் சிக்கிய குரேஷி, தனக்கு பேய் பிடித்திருந்ததாகவும், தன்னைக் காப்பாற்ற கடவுளின் உதவி வேண்டும் என்றும் நினைத்ததாக கூறியுள்ளார். மேலும், கடவுள் தனக்கு உதவ வேண்டுமென்றால், தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை பலிகொடுக்க வேண்டும் என கூறியதால், தனது மகளின் கழுத்தை அறுத்துக் கொன்றேன் எனவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Advertisment