Skip to main content

எனக்கு 70 உனக்கு 28; மருமகளைத் திருமணம் செய்துகொண்ட மாமனார்

 

Father in law married daughter in law in Uttar Pradesh

 

70 வயது முதியவர் 28 வயதான தனது மருமகளை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதுடைய கைலாஷ் யாதவ். இவருக்கு திருமணமாகி நான்கு பிள்ளைகளை உள்ளனர். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, தனது பிள்ளைகள் வீட்டுடன் வசித்து வந்துள்ளார். 

 

இந்நிலையில் கைலாஷ் யாதவ் தனது மருமகள் பூஜாவை(28) திருமணம் செய்துள்ளார். கைலாஷின் மூன்றாவது மகனின் மனைவிதான் பூஜா. இவரது கணவரும் இறந்துவிட, பூஜா வேறு ஒரு திருமணம் செய்துகொண்டதாகவும், ஆனால் அவரது குடும்பத்தை பிடிக்காததால், மீண்டும் தனது முதல் கணவரின் வீட்டிற்கு திரும்பி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் மாமனார் கைலாஷ், சமீபத்தில் பூஜாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும், பூஜா தனது புதிய உறவில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 70 வயது முதியவர் 28 வயதான தனது மருமகளை திருமணம் செய்துகொண்டது பேசு போருளாக மாறியுள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !