Advertisment

மகளைத் துன்புறுத்திய இளைஞர்; கொடூரமாகக் கொன்று உடலை எரித்த தந்தை!

Father hit man who torture his daughter in telangana

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் 26 வயது நபர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அந்த நபர், சில தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வராததால் காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisment

போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் காதல் என்ற பெயரில் துன்புறுத்தி வந்துள்ளார். இதில் மனமுடைந்த அந்த சிறுமி, தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த தந்தை, அந்த நபரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் வைத்து அந்த நபரை கொலை செய்துள்ளார். மேலும், அந்த உடலை தீ வைத்து எரித்துள்ளார். மீதமுள்ள எரிக்கப்படாத உடல் பாகங்களை சில பாறைகளுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

Advertisment

இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி, பாதிக்கப்பட்டவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தந்தையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

incident police telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe