case

Advertisment

கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஃப்ராங்கோ. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். கேரள உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், பாதிரியார் ஃப்ராங்கோவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இவரின் மீது அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, பாதிரியார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வாட்டிக்கனும் இவரின் மீது நடவடிக்கை எடுத்து இவரின் பொறுப்பிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.