Advertisment

2 வயது குழந்தையைக் கால்வாயில் வீசி கொன்ற தந்தை; விசாரணையில் பரபரப்பு தகவல்!

Father did 2-year-old by throwing him into canal in UP

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுலேமான். இவருடைய இரண்டு வயது மகள் காணவில்லை என்று கடந்த 14ஆம் தேதி சர்தானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப்புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தையைத்தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில்பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சுலேமான் தனது மகளுடன் செல்வது பதிவாகியிருந்தது. அதன் பின்னர், இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுலேமானின் 2 குழந்தைகள் இதே போல் மர்மமான முறையில் காணாமல் போனதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதனால், சுலேமான் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சுலேமானின் 2 வயது பெண் குழந்தையும், மகனும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுலேமான், தனது மகளை தனியாக அழைத்து வந்து அருகே உள்ள கால்வாயில் வீசியதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சுலேமான் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் 2 குழந்தைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கால்வாயில் வீசி கொல்லப்பட்ட குழந்தையின் உடலை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Investigation incident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe