ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபோராவில் கடந்த 2019, பிப்ரவரி 14-ம் தேதி 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உதவியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

father daughter duo arrested in pulwama case

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த கோர சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவுற்ற நிலையில், இந்த சம்பவத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு உதவியாக இருந்ததாக ஜம்முவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீர் தாரிக் மற்றும் அவரது மகள் இன்ஷா ஆகியோர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்திற்கு உதவியதாக அந்த.ஐ.ஏ வால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.