
மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் தந்தையே மகளின் உடலை தூக்கிக்கொண்டு நடந்த சம்பவம் சத்தீஸ்கரில் நிகழ்ந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள லக்கணபூர் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் உடலை எடுத்துச்செல்ல ஊர்தி வராததால் சிறுமியின் தந்தையே மகளின் உடலை தோள்மீது போட்டுக்கொண்டு சாலையோரமாக நடந்து சென்றார். இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில் வட்டார மருத்துவ அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சத்தீஸ்கர் மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் சிங் தேவ் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)