Advertisment

மாட்டு சாணத்தில் கோட்டிங் அடித்த காரை மகளுக்கு பரிசாக வழங்கிய தந்தை!

மகளின் திருமணத்தில் அவரின் தந்தை கொடுத்த பரிசு ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது. திருமணத்திற்கு விருந்தினர்களும், குடும்பத்தாரும் பரிசுகள் வழங்குவது என்பது உலகம் முழுவதும் உள்ள வழக்கமான முறைகளில் ஒன்று. ஆனால், அவ்வாறு வழங்கப்பட்ட பரிசு தற்போது பெரிய அளவில் விளம்பரத்தை கொடுத்துள்ள சம்பவம் மராட்டியத்தில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

மும்பையை சேர்ந்த ஒரு மருத்துவரின் மகளுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர் தன் மகளுக்கு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட அந்த காரை தன்னுடைய மகளுக்கு கொடுத்துள்ளார். மாட்டு சாணத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. எனவே அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக நான் இந்த காரை என் மகளுக்கு வழங்கினேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த காரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe