மகனை அடித்த ஆசிரியரை பிரம்பால் அடித்து வெளுத்த நபர்!

மராட்டிய மாநிலத்தில் தன்னுடைய மகனை அடித்த ஆசிரியரை அந்த மாணவனின் தந்தை பிரம்பால் வெளுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியம் மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் கேவார். இவருடைய மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6 வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் கடைசியாக நடந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் கோபமான அவரின் ஆசிரியர் அந்த மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் போன அந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்றுள்ளான்.

நடந்த சம்பவம் தொடர்பாக கேட்ட அந்த சிறுவனின் தந்தை கடும் கோபத்தோடு சிறுவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார். ஆசிரியரிடம் இதுதொடர்பாக பேசிய போது, படிக்கவில்லை என்றால் நான் அடிப்பேன் என்று ஆசிரியர் மாணவனின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமான அந்த சிறுவனின் தந்தை, என் மகனை மீண்டும் அடிப்பியா என்று கேட்டுக்கொண்டே ஆசிரியர் கையில் இருந்த பிரம்பை பிடுங்கி அவரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். ஆனால் ஆசிரியரை ஆசை தீர அடித்து முடித்த பிறகே அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

school
இதையும் படியுங்கள்
Subscribe