பெற்ற மகளையே அரிவாளால் வெட்டி கொன்ற தந்தை; போலீஸ் பிடியில் இருந்து தப்பி தற்கொலை

father attack daughter in kerala; viral incident

பெற்ற ஆறு வயது மகளையே அரிவாள் வெட்டி கொலை செய்த தந்தை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பைஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் மாவெளிகரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ மகேஷ். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்த ஸ்ரீமகேஷ் கடந்த ஜூன் மாதம் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட சண்டையில்மனைவியையும் 6 வயது மகள் நட்சத்திராவையும் அரிவாளால் வெட்டினார். இதில் மனைவியும் மகளும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் சிறுமி நட்சத்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தந்தை ஸ்ரீமகேஷ் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து ஸ்ரீ மகேஷிடம் போலீசார் விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீமகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்சிறையில் அடைப்பதற்காகசாஸ்தான்கோட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்த ஸ்ரீமகேஷ்ரயில் முன் பாய்ந்தார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஸ்ரீமகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்த தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

daughter incident Kerala police
இதையும் படியுங்கள்
Subscribe