Advertisment

முதல் நாள் மாப்பிள்ளைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்...அதிர்ச்சியில் மனைவி...கைதான தந்தை!

திருமணம் முடிந்த முதல் நாள் இரவன்று தனது மகனை தந்தையே அடித்து கொன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விசாரித்த போது, மும்பையைச் சேர்ந்த தோண்டிராம் கெய்க்வார்ட் என்பவரின் மகன் மிலிண்ட். இவருக்கு வயது 50. மிலிண்ட்டிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்து பெற்றதும் தொடர்பு வைத்திருந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு மிலிண்டின் தந்தை மறுத்துள்ளார்.

Advertisment

incident

அதனை ஏற்காத மிலிண்ட் தொடர்பில் இருந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்பு இருவரும் திருமணம் முடிந்து மிலிண்ட்டனின் வீட்டில் குடிபெயர்ந்து உள்ளனர். இவர்களது திருமணத்தில் விருப்பம் இல்லாத தந்தை இவர்களை கண்டு கொள்ளாமல் கோபத்தில் இருந்துள்ளார்.இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தனது இரண்டாவது மனைவியை தனது வீட்டிற்குள் மிலிண்ட் அழைத்து சென்றுள்ளார். பின்பு இரவு வெகு நேரம் சென்ற பிறகு மிலிண்ட் இருக்கும் அறைக்குள் அவரது தந்தை தோண்டிராம் கெய்க்வார்ட் கையில் கட்டையுடன் சென்றுள்ளார்.

அதன் பின்பு மிலிண்ட் தலையில் கட்டையால் பலமாக அடித்துள்ளார். இதனை கண்ட மிலிண்டின் இரண்டாவது மனைவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். ஆனால் இதை கண்டுகொள்ளாமல் மிலிண்டின் தலையில் மீண்டும் அவரது தந்தை அடித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே தனது மனைவியின் கண் முன்னே துடி துடித்து இரத்த வெள்ளத்தில் இறந்து போனார். இதனை தொடர்ந்து மிலிண்ட்டின் தந்தை அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். திருமணம் நடந்த முதல் நாளில் தனது கணவர் அவரது தந்தையால் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து கொல்லப்பட்ட மிலிண்டின் மனைவி இன்னும் மீளாமல் இருப்பதாக கூறுகின்றனர்.

Advertisment
case police incident marriage parents
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe