Advertisment

“துரோகம் செய்தால் இதுதான் கதி” - இன்ஸ்டாகிராமை அதிர வைத்த இளைஞரைத் தேடும் போலீசார்

'This is the fate if you betray'-Police are looking for the teenager who rocked Instagram

தனக்குத்துரோகம் செய்ததாகக் காதலியை அறுத்துக் கொலை செய்த இளைஞர் ஒருவர் அதனை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்ட நிலையில் அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment

அபிஜித் படிதார் என்ற இளைஞர் மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் சிறிய தொழிலதிபராக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் 'பச்சையாக துரோகம் செய்யக்கூடாது' என அந்த வீடியோவில் கொடூரமாகப்பேசிய அபிஜித் படிதார் 'துரோகம் செய்தால் இதுதான் கதி' என இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதைக் காட்டினார்.

Advertisment

இந்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் இது போலீசார் கவனத்திற்குச் சென்றது. முதற்கட்ட தகவலில் ஜிதேந்திர குமார் என்ற அவருடைய பாட்னருடன் அவருடைய காதலி முறையற்ற தொடர்பு வைத்திருந்ததால் காதலியைக் கொன்றது தெரிய வந்தது. இந்நிலையில் அபிஜித் படிதாரை போலீசார் தேடி வரும் நிலையில் தற்போது அதே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள போஸ்டில் 'நம்ம ரெண்டு பேரும் சொர்க்கத்தில் சந்திப்போம்' எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷில்பா ஜாரியா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜபல்பூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்தக் கொலை நிகழ்ந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் கொலையில்ஈடுபட்ட அபிஜித் படிதாரை போலீசார் தேடி வருகின்றனர்.

instagram police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe