Advertisment

உலக மக்கள் தொகை பெருக்கம் - உலக நாடுகளை பின்னுக்குதள்ளிய தென்னக நகரங்கள்!

உலகில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் கேரளாவில் மூன்று இடங்கள் இடம்பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் சார்பு நிறுவனமான தி எகனாமிஸ்ட் மேகஸின் இதழ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கேரளாவின் மலப்புரம் முதலிடத்தையும், கோழிக்கோடு 4வது இடத்தையும், கொல்லம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து திருப்பூர் நகரம் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. திருப்பூருக்கு 30வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் வியட்நாமின் கேன் தோ நகரம் 2வது இடத்தையும், சுக்லோன் நகரம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம்ஆண்டு வரையில் கேரளாவின் மலப்புரம் பகுதி மக்கள் தொகை பெருக்கத்தில் முன்பைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Population
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe