Skip to main content

உலக மக்கள் தொகை பெருக்கம் - உலக நாடுகளை பின்னுக்குதள்ளிய தென்னக நகரங்கள்!

Published on 09/01/2020 | Edited on 10/01/2020


உலகில் மக்கள் தொகை வேகமாக வளர்ந்துவரும் நகரங்களின் பட்டியலில் கேரளாவில் மூன்று இடங்கள் இடம்பெற்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் சார்பு நிறுவனமான தி எகனாமிஸ்ட் மேகஸின் இதழ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கேரளாவின் மலப்புரம் முதலிடத்தையும், கோழிக்கோடு 4வது இடத்தையும், கொல்லம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழகத்தில் இருந்து திருப்பூர் நகரம் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளது. திருப்பூருக்கு 30வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.



மேலும் வியட்நாமின் கேன் தோ நகரம் 2வது இடத்தையும், சுக்லோன் நகரம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. ஓமன் தலைநகர் மஸ்கட் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் கேரளாவின் மலப்புரம் பகுதி மக்கள் தொகை பெருக்கத்தில் முன்பைவிட 44 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் குறையும் தமிழர்களின் எண்ணிக்கை; அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

 Declining number of Tamils ​​in Sri Lanka; The statistics are shocking

 

இலங்கையில் பூர்வீகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்ற இனப் பிரச்சனையால் நேரிட்ட போர், அதன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், அதன் காரணமாக ஏற்பட்ட இடம்பெயர்தல் ஆகிய காரணங்களால் அகதிகளாக மக்கள் தொடர்ந்து வெளியேறி வருவதால் அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

 

இது இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களில் தெளிவாகத் தெரிகிறது. கிழக்கு மாகாணத்தில் சிங்களர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு தமிழ் மக்களின் மக்கள் தொகை இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் தமிழர்களை பொறுத்தவரை மூன்று பிரிவுகளாக பார்க்கப்படுகிறது. ஈழத்தமிழர், மலையகத்தமிழர், தமிழ் பேசும் இஸ்லாமியர் என குறிப்பிடப்படும் வகையில் 1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. திரிகோணமலையில் 1881-ல் 64.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012-ல் 32.3 எனப் பாதியாகக் குறைந்துள்ளது. அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் 1963-ல் 28.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012-ல் 17.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 

 

Next Story

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

 united nation report for world population census related 
மாதிரி படம் 

 

மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

 

உலக மக்கள் தொகை நிலை அறிக்கை 2023ஐ ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உலகில் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகையில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்திய மக்கள் தொகை 142.86 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் சீன மக்கள் தொகையானது 142.57 கோடியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் அமெரிக்க மக்கள் தொகை 34 கோடியாக  மூன்றாம் இடத்தில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகையானது கடந்த ஆண்டுதான் முதல் முறையாக அதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறையத் தொடங்கியது. சீனாவின் இந்த மக்கள் தொகை குறைவு விகிதம் மேலும் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையானது 2050 ஆம் ஆண்டில் 166.8 கோடியாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.