Skip to main content

டிசம்பர் 1 முதல் 'பாஸ்டேக்' இல்லை என்றால் டோல்களில் இரட்டை கட்டணம்...

Published on 23/11/2019 | Edited on 26/11/2019

வரும் டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் பொறுத்தப்படுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

fastag is compulsary from december 1

 

 

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்கவே இந்த பாஸ்டேக் முறை கொண்டுவரப்பட்டது. காரின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு சிறிய சிப் மூலம் நாம் செலுத்தவேண்டிய தொகை தானாகவே நமது வங்கி கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். எனவே மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும் என்கிறது மத்திய அரசு.

இதுகுறித்து பேசிய மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு துறை அமைச்சர் நிதின் கட்கரி, வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை இந்த பாஸ்டேக் அட்டைகள் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன என தெரிவித்தார். மேலும், Axis Bank, State Bank of India, ICICI Bank, IDFC Bank உள்ளிட்ட 22 அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இந்த பாஸ்டேக் அட்டையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். முதல் முறை இதனை வாங்கும் போது, இணைப்பு கட்டணமாக ரூ.100, வாகனங்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.200 முதல் ரூ.400 வரையும் செலுத்த வேண்டும்.

மேலும், டிசம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பாஸ்டேக் அட்டை இல்லாமல் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்