Advertisment

கைத்தட்டல் - காரில் பரேடு; அமைச்சரின் வணக்கத்தோடு ஓய்வுபெற்ற மோப்ப நாய்! (வீடியோ உள்ளே)

spike

மகாராஷ்ட்ரா மாநிலதின்நாசிக்நகர காவல்துறையின் பணியாற்றிய ஸ்பைக்என்ற மோப்பநாய், இரண்டு நாட்களுக்கு முன்பு ஓய்வுபெற்றது. இந்த மோப்பநாய், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் மற்றும் அகற்றல் பிரிவில் 11 ஆண்டுகள்சேவைசெய்துள்ளது. தற்போது ஸ்பைக்ஓய்வு பெற்றுள்ளதையடுத்து, அதற்கு நாசிக் காவல்துறையினர் நெகிழ்ச்சியான பிரிவு உபச்சாரவிழா நடத்தியுள்ளனர்.

Advertisment

ஸ்பைக்கிற்கு மாலை அணிவித்து, ரோஜாக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டகாரின் வெளிப்பகுதியில் அமரவைத்து, போலீஸார்காரைஓட்டினர். அப்போது காவல்துறையினர் இருபுறமும் நின்று கைகளைத் தட்டி, ஸ்பைக்கிற்கு மரியாதை செலுத்தினர். இந்த வீடியோவைதனதுட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஸ்பைக்நாட்டிற்கு ஆற்றியசேவைக்காக, அதற்குவணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அனில் தேஷ்முக், 11 வருடங்கள் சிறப்பானசேவையில், வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்களிப்பு ஆற்றியபிறகு ஓய்வுபெறும் 'ஸ்னிஃபர் ஸ்பைக்'-கிற்கு, நாசிக்போலீஸார், சிறப்புப் பிரிவு உபச்சார விழாவைநடத்தினர்.அவர் ஒரு நாய் மட்டுமல்ல. போலீஸ் குடும்பத்தில் ஒரு அங்கமாகிவிட்டார். நாட்டிற்குஆற்றியசேவைக்காக, அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

dog Maharashtra police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe