விவசாய சேலஞ்ச்!!! -கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம்...

கோவாவில் ஊராட்சித்தலைவரின் சவாலை ஏற்று விவசாய பணிகளை அரசியல்வாதிகள் செய்துவருகின்றனர்.

farming

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கோவாவில்உள்ள அக்வேவ் பைக்சோம் என்ற கிராமத்தின் ஊராட்சித் தலைவர் சித்தேஷ் பகத். இவர், தன்னுடைய விவசாய நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற புகைப்படத்தை எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவேற்றினார். அந்த பதிவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா சட்டமன்ற உறுப்பினர் அலெக்சியா ரெஜினால்டோவுக்கு டேக் செய்து, நீங்களும் விவசாய பணிகளில் ஈடுபட்டு அதை புகைப்படம் எடுத்து பதிவிடுங்கள் என்று சவால்விட்டார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இச்சவாலை ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ரெஜினால்டோ, விவசாய நிலத்தில் இறங்கி களை எடுக்கும் பணிகளை செய்து அதை பேஸ்புக்கில் பதிவிட்டார். மேலும் அதில் சில அரசியல்வாதிகளை டேக் செய்தார். டேக் செய்தவர்களும் தற்போது விவசாய பணிகளை செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.கோவா வருவாய் துறை அமைச்சர் ரோஹன் கவுந்தே, வேளாண் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் விவசாயப் பணிகளைசெய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கோவா அரசியல்வாதிகளின் இந்த செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

congress Goa
இதையும் படியுங்கள்
Subscribe