Advertisment

களத்திற்கு வந்த விவசாயிகள்; மீண்டும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய போலீசார்!

Farmers who came to the field The police threw smoke again

விவசாயிகள் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலைநகர் டெல்லியை நோக்கி, 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பேரணியாகச் சென்றனர். அப்போது, விவசாயிகளுக்கும் ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் இடையே பஞ்சாப் - ஹரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்தது. மேலும் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனையடுத்து, அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் பஞ்சாப் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாகச் செல்லும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன்படி பஞ்சாப் - ஹரியான எல்லையான ஷம்புவில் இருந்து விவசாயிகள் தங்கள் பேரணியை நேற்று முன்தினம் (06.12.2024) தொடங்கினர். அப்போது, இரும்பு வேலிகள், பேரி கார்டுகள் உள்ளிட்டவற்றை வைத்து, விவசாயிகளை ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதனையும் மீறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாக விவசாயி சங்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று (08.12.2024) ஷம்பு எல்லையில் இருந்து டெல்லியை நோக்கிச் செல்ல விவசாயிகள் முயன்றனர். அப்போது ஷம்பு எல்லையில் 101 பெயர்கள் கொண்ட விவசாயிகள் டெல்லி செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால் எந்தெந்த நபர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் எனச் சரி பார்க்க வேண்டும். அதற்காக விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையைக் காண்பித்து விட்டு உள்ளே செல்ல அனுமதிக்கிறோம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் விவசாயிகள் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு உள்ளே செல்வதற்கு முயற்சி மேற்கொண்டனர். அப்போது விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டை வீசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாகப் போராட்டம் நடத்தும் விவசாயி ஒருவர் கூறுகையில், “காவல்துறையினர் வைத்திருக்கும் பட்டியல் தவறானது. இங்கு வரும் விவசாயிகளின் பெயர்கள் பட்டியலில் இல்லை. எங்களை முன்னேற அனுமதிக்குமாறு காவல்துறையிடம் கேட்டுள்ளோம். நாங்கள் அடையாள அட்டையைக் காட்டுகிறோம். ஆனால் காவல்துறையினர் எங்களை உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். எனவே நாங்கள் ஏன் எங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும்?. இது பஞ்சாப் மாநிலம் என்பதால் காவல்துறையினரை ஹரியானாவுக்குச் செல்லுமாறு அவர்களிடம் கூறினேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், ஹரியானா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் முதலில் விவசாயிகளை அடையாளம் காண்போம். அதன் பின்னர் அவர்களை உள்ளே அனுமதிக்கலாம். எங்களிடம் 101 விவசாயிகளின் பெயர் பட்டியல் உள்ளது. ஆனால் வந்தவர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள நபர்கள் இல்லை. மேலும் அவர்கள் எங்களை அடையாளம் காணவும் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஒரு கும்பலாக முன்னேறி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

police Delhi haryana Punjab Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe