ADVERTISEMENT

"இன்று நேர்மறையான முடிவு எட்டப்படாவிட்டால்" -மத்திய அரசுக்கு விவசாய இயக்கம் எச்சரிக்கை! 

02:54 PM Dec 05, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

ADVERTISEMENT

இந்தநிலையில், இன்று விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், கிஷன் மகாபஞ்சாயத் என்ற விவசாய இயக்க தலைவர் ராம்பால் ஜத், இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் நேர்மறையான முடிவு எட்டப்படாவிட்டால், ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் டெல்லி நோக்கி வந்து போராட்டத்தில் ஈடுபடுவர் என மத்திய அரசை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு மூன்று கருப்பு சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும். மேலும் குறைந்தப்பட்ச ஆதார விலை தொடருமென எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில் நேர்மறையான முடிவு ஏற்படாவிட்டால், ராஜஸ்தான் மாநில விவசாயிகள், 8 ஆம் எண் தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லியை நோக்கி பேரணியாக வந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபடுவர்" என கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT