Advertisment

"இன்று நேர்மறையான முடிவு எட்டப்படாவிட்டால்" -மத்திய அரசுக்கு விவசாய இயக்கம் எச்சரிக்கை! 

rampal jat

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின், 'புராரி' பகுதியில் அமைந்துள்ள மைதானத்திலும், டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளிலும் தொடர்ந்து பத்தாவது நாளாக விவசாயிகள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுடன் நான்குசுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

Advertisment

இந்தநிலையில், இன்று விவசாயிகளுக்கும்,மத்திய அரசுக்கும்இடையேயான ஐந்தாம்கட்ட பேச்சுவார்த்தை, இன்று நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், கிஷன்மகாபஞ்சாயத் என்ற விவசாயஇயக்கதலைவர் ராம்பால்ஜத், இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில்நேர்மறையான முடிவு எட்டப்படாவிட்டால், ராஜஸ்தான் மாநிலவிவசாயிகளும் டெல்லிநோக்கி வந்து போராட்டத்தில் ஈடுபடுவர் எனமத்திய அரசைஎச்சரித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு மூன்று கருப்பு சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவிக்கவேண்டும். மேலும் குறைந்தப்பட்ச ஆதாரவிலை தொடருமெனஎழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவில்நேர்மறையான முடிவு ஏற்படாவிட்டால், ராஜஸ்தான் மாநிலவிவசாயிகள், 8 ஆம் எண் தேசியநெடுஞ்சாலை வழியாக டெல்லியை நோக்கிபேரணியாக வந்து, ஜந்தர் மந்தர்பகுதியில் முகாமிட்டுபோராட்டத்தில் ஈடுபடுவர்" என கூறியுள்ளார்.

Rajasthan farmer protest.
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe