Advertisment

விவசாயிகள் பேரணியில் வன்முறை - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

supreme court

Advertisment

மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராகபோராடி வரும் விவசாயிகள், நேற்று (26.01.2021) ட்ராக்டர்பேரணியைநடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. டெல்லி செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக்கொடிஏற்றப்பட்டது.

இந்நிலையில் விவசாயப் போராட்டத்தில் ஏற்பட்டவன்முறை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டுமெனஉச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல்செய்துள்ளார்.

வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளமனுவில், "சுதந்திரமான ஆணையம்ஒன்றை அமைத்து, டெல்லியில் நடைபெற்றசம்பவங்கள் குறித்துவிசாரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கும், பொது சொத்திற்கு சேதம்ஏற்படகாரணமாகவும், தேசியஅவமானத்திற்கு காரணமாகவும் விளங்கியகுற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எனதுமனுவைஉச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

Farmers farmers bill Supreme Court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe