kl;

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் குடியரசுத் தினமான நேற்று முன்தினம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு டெல்லி காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் பலியானார்.இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, "இந்த விவசாயச் சட்டம் பற்றி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் புரியவில்லை.அப்படித் தெரிந்திருந்தால், அனைவரும் போராடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.