மத்திய அரசின்புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிரானவிவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 7 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்தநிலையில், நாளை எட்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டெல்லியின் நான்கு எல்லைகளிலும் விவசாயிகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டிராக்டர்பேரணி நடத்தி வருகின்றனர். அதேபோல்ஹரியானாமாநிலவிவசாயிகள், பால்வால் மாவட்ட எல்லையிலிருந்து, டெல்லியின் சிங்கு எல்லைக்கு ட்ராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பாரதியகிசான்யூனியன் என்ற விவசாய அமைப்பு, வரும் 26 ஆம் தேதி நடைபெறப்போகும் விவசாயிகளின் ட்ராக்டர்பேரணிக்கு, இன்றைய பேரணி ஒத்திகையாக இருக்கும் எனதெரிவித்துள்ளது.