Advertisment

போராட்டத்திற்கு மத்தியில் விவசாயிகளின் கல்வி சேவை!

schools at farmers site

மத்திய அரசின்வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும்தீர்வு எட்டப்படாத நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதில்உறுதியாக இருக்கின்றனர்.

Advertisment

விவசாயிகள் நடத்தியட்ராக்டர்பேரணியில்வன்முறை வெடித்தது. அதனையடுத்து சிங்கு எல்லையிலும் கலவரம்நடந்தது. இத்தனைக்கும் மத்தியில் போராட்டம் நடத்தும்விவசாயிகள், குழந்தைகளுக்குப் பள்ளியையும் நடத்தி வருகிறார்கள். கரோனாகாரணமாகபள்ளிகள் மூடப்பட்டபின்னர், பள்ளிகளுக்குச் செல்லாமல் வீடுகளில்இருக்கும்ஏழைக் குழந்தைகளுக்கும், விவசாயிகள் போராட்டம் நடத்தும்இடத்திற்கு குப்பைகளையும், பாட்டில்களையும் பொறுக்க வந்தகுழந்தைகளுக்கும் விவசாயிகள் பாடம் நடத்தி வருகிறார்கள். இதில் படிக்கும் சில குழந்தைகள் இதுவரை பள்ளிக்கேசென்றதில்லை.

Advertisment

விவசாயிகள் நடத்தி வரும் இதுபோன்றபள்ளியில், சிங்குஎல்லையில் 160க்கும் மேற்பட்ட குழந்தைகளும், காசிப்பூர் எல்லையில் 70 - 80 குழந்தைகளும் படித்து வருகின்றனர். இதுபற்றி அந்தப் பள்ளிகளில் பாடம் நடத்தி வரும் போராட்டக்காரர் கூறுகையில், “முதலில் நங்கள்குழந்தைகளை இங்கு இழுத்து வர வேண்டும்எனநினைத்தோம். ஆனால் சிலநாட்களுக்குப் பிறகு அவர்களை இங்கு அழைத்துவர எந்த முயற்சியும் எடுக்க வேண்டிய தேவையில்லை. முதலில் எங்கள் மொழியைஅவர்கள் மீது திணிக்க கூடாதுஎன்பதற்காக, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அவர்களுக்குப் பயிற்றுவித்தோம். ஆனால் சிலகுழந்தைகள் பஞ்சாபிகற்றுக்கொள்ள வேண்டும் எனவிரும்பியதால், பஞ்சாபிமொழியையும் கற்றுக்கொடுக்க ஆரம்பிதோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தில், நூலகம் உள்ளிட்ட வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

border Delhi Farmers schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe