ADVERTISEMENT

டெல்லி எல்லையில் ட்ராக்டர் பேரணிக்கு தயாராகும் விவசாயிகள்!

07:39 PM Jun 25, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

file pic

ADVERTISEMENT

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். ஆறு மாதங்களுக்கு மேலாக அவர்கள் போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகள், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். மத்திய அரசோ சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

விவசாயிகளும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ட்ராக்டர் பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த 26ஆம் தேதி, தங்கள் போராட்டம் ஆரம்பித்து ஆறு மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, அன்றைய நாளை கருப்பு தினமாக அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஆரம்பித்து நாளையுடன் 7 மாதங்கள் நிறைவடைகிறது. போராட்டம் தொடங்கி ஏழு மாதம் நிறைவடைவதையொட்டி, நாளை நாடு முழுவதுமுள்ள ஆளுநர் மாளிகைகள் முன்பு போராட்டம் நடைபெறும் எனவும், நாளைய தினம் விவசாயத்தைக் காப்பாற்றும் தினமாகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் தினமாகவும் கடைப்பிடிக்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்தநிலையில் டெல்லி எல்லையில் ட்ராக்டர் பேரணி நடத்தவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாயிகள் ட்ராக்டர் பேரணியையடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT