டெல்லியில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு அடுத்த தவணைக்கான உதவித்தொகையை இன்று விடுவிக்கிறது மத்திய அரசு. நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் அடுத்த தவணைத்தொகையாக ரூபாய் 18,000 கோடி செலுத்தப்படுகிறது.
இதனிடையே, மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.