Advertisment

கரோனா தடுப்பூசிக்கு மறுப்பை தெரிவிக்கும் விவசாயிகள்!

farmers

கரோனாதொற்றைஒழிக்க,நாடு முழுவதும் ஜனவரிமாதம் முதல் தடுப்பூசிசெலுத்தும் பணிகள்தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்குகரோனாதடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்குமேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (01.03.2021) தொடங்கியது. பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாஉள்ளிட்ட பலர் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Advertisment

இந்தநிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்துபாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) அமைப்பின் தலைவர், "விவசாயிகளுக்குக் கரோனா என்பதுஇல்லை.நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் எனயாரிடமும் கூறவும் மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

பாரதியகிசான்யூனியன் அமைப்பு, “உள்ளூர் நிர்வாகம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்தால், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில்தங்கள் தலைவர் ராகேஷ்திகைத்திற்கு எந்தப்பிரச்சனையும்இல்லை” எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தஉறுப்பினர் ஒருவர், "கரோனா வைரஸுக்கு நாங்கள் பயப்படவில்லை. டெல்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தர்ணா போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு கரோனா வைரஸ் கூட கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் யாரேனும் விரும்பினால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும், அதனைத் தடுக்க மாட்டோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

coronavirus vaccine farmbill Farmers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe