rakesh tikait

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், இன்று நாடு முழுவதும் சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். மேலும், மதியம் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை இந்தச் சாலைமறியல் போராட்டம் நடைபெறும்எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, இன்று விவசாயிகள் பஞ்சாப், ராஜஸ்தான், கேரளாஉள்ளிட்டநாட்டின்பல பகுதிகளிலும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம்ஏலகங்காவில் சாலை மறியலில்ஈடுபட்டவிவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர். இதேபோல்தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Advertisment

இந்தநிலையில் அழுத்தத்தோடு மத்திய அரசுடன்பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என பாரதிய கிசான் யூனியன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாகபாரதியகிசான்யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், "வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசுக்குஅக்டோபர் 2 ஆம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளோம். அதன்பிறகு நாங்கள்மேற்கொண்டு முடிவெடுப்போம். அழுத்தத்தோடு மத்திய அரசுடன்பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் டெல்லியின்சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரிஎல்லைகளில், இன்று இரவு 11.59-வரை இணைய சேவைமுடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment