farmers

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று நடத்திய ட்ராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் சீக்கியர்களின் புனிதக் கொடிஏற்றப்பட்டது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லிபோலீசார்20க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில் மூன்று வேளாண்சட்டங்களையும் திரும்பப் பெறுமாறுவலியுறுத்தி, விவசாயிகள் நாளை நாடு தழுவிய சாலைமறியல் போராட்டத்தைஅறிவித்துள்ளனர். இந்தச் சாலை மறியல் போராட்டம் அமைதியான முறையில்நடைபெறுமென விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

இந்தநிலையில் விவசாயிகளின் நாடு தழுவிய சாலைமறியல் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. குடியரசு தினத்தன்றுவிவசாயிகள் நடத்திய ட்ராக்டர்பேரணிக்குப் பிறகு, விவசாயிகள் நடத்தும்மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.