Advertisment

மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்த பஞ்சாப் விவசாயிகள்!

farmers

Advertisment

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள், வெற்றியோடும்மத்திய அரசின் உத்தரவாதத்தோடும்வீடு திரும்பியுள்ள நிலையில், விவசாய சங்கமான கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பஞ்சாப் முழுவதும் வரும் 20 ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் கடன்களை 100 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் எனகிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போராட்டத்தை தனியாக தாங்கள்மட்டும் தொடங்குவதாகவும், இந்த போராட்டம் மேலும் பல மாநிலங்களுக்கு பரவலாம் எனவும் அந்த விவசாய சங்கம் கூறியுள்ளது.

Farmers Punjab
இதையும் படியுங்கள்
Subscribe