
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதையொட்டி, நாளை பிரமாண்ட ட்ராக்டர்பேரணியை நடத்தவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி1 ஆம் தேதி, நாடாளுமன்றத்தை நோக்கி நடைப்பயணம் செய்யவுள்ளதாக விவசாயஅமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்துகிரந்திகாரி கிசான் யூனியன் என்ற விவசாய அமைப்பு, "பிப்ரவரி 1 ம் தேதி, டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி வெவ்வேறு பகுதிகளிலிருந்து இருந்து நடைப்பயணம் மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 29 ஆம் தேதி,இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. விவசாயிகள் நடைப்பயணம்அறிவித்துள்ள நாளன்று, பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us