டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தன்றுநடத்தியடிராக்டர்பேரணியில்நடந்த வன்முறை, அதனையடுத்து சிங்குஎல்லையில் நடந்த கலவரம்காரணாமாகடெல்லிஎல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராடி வரும் டெல்லிஎல்லைப் பகுதிகளில், டெல்லி காவல்துறையினர் கான்க்ரீட் தடுப்புகள், முள்வேலிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்புகளை எழுப்பி வருகின்றனர். மேலும் அங்கு காவல்துறையினர், தரையில்ஆணிகளையும் பதித்துள்ளனர். விவசாயிகள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கவும், வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லி எல்லைக்கு வருவதைத் தடுக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் காசிப்பூர் எல்லையில், தரையில் ஆணிகளைப் பதித்த டெல்லி காவல்துறைக்குப் பதிலடியாக, ஆணிகளுக்கு அருகே விவசாயிகள் பூச்செடிகளை நட்டனர். இதுகுறித்து விவசாயசங்கத்தலைவர்களில் ஒருவரானரமேஷ்திகைத், "காவல்துறைவிவசாயிகளுக்காக இரும்பு ஆணிகளைப் பதித்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்காகப் பூக்களைநட திட்டமிட்டுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.