உலகின் முதல் நாடாக, புத்தாண்டு கொண்டாட்டத்தை நியூசிலாந்து நாடு தொடங்கியது. நியூசிலாந்து மக்கள் வானவேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற நிலையில், தற்பொழுது இந்தியாவில் புத்தாண்டு பிறந்தது.
2020 ஆம் ஆண்டு முதல் கரோனா உலகையே முடக்கிய நிலையில், 2021 ஆம் ஆண்டு உலகம் கரோனா பிடியிலிருந்து சற்று மீண்டது. இப்படி பல்வேறு நிகழ்வுகளுக்கு மத்தியில் தன்னம்பிக்கையின் துளியாக மலர்ந்தது புத்தாண்டு. வந்திருக்கும் புதிய ஆண்டை (2022)வரவேற்று நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.