shashi tharoor

மத்தியில் ஆளும் பாஜக அரசு, மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தின் மீது பாஜக தாக்குதல் நடத்துவதாகவும், மக்களிடையே வெறுப்பை விதைப்பதாகவும்தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், பிரதமர் மோடி நாட்டு மக்களை குறிக்க பயன்படுத்தும் வார்த்தையான மித்ரான் என்ற வார்த்தையை குறிப்பிட்டு, அவரை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒமிக்ரானை விட மிகவும் ஆபத்தானது 'ஒ மித்ரான்'. அதன் விளைவுகளை அதிகரித்துள்ள மதரீதியிலான மக்கள் பிளவு,வெறுப்பு மற்றும் மதவெறியை ஊக்குவிக்கும் செயல்பாடுகள்,அரசியலமைப்பின் மீதான நயவஞ்சகத் தாக்குதல்கள், ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் செயல்கள் ஆகியவற்றிலிருந்து நாம் அளவிடுகிறோம்" என கூறியுள்ளார்.

Advertisment

மேலும் "இந்த ('ஓ மித்ரான்) வைரஸில் லேசான மாறுபாடு எதுவுமில்லை" எனவும் சசி தரூர் கூறியுள்ளார்.