ADVERTISEMENT

12,500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம்!

01:56 PM Jul 28, 2019 | santhoshb@nakk…


ஜப்பான் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான 'நிசான் நிறுவனம்' ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகளவில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 12,700 ஊழியர்களையும், இந்தியாவில் ரெனால்ட்- நிசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 1,710 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்ய நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகன விற்பனையில் தொடரும் மந்தநிலை காரணமாக, சர்வதேச அளவில் மறுச்சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிசான் நிறுவனத்தின் லாபம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால், செலவினங்களை கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கையை நிசான் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிறுவனத்தை போன்று மற்ற நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து வருவதால், ஆட்குறைப்பு நடவடிக்கைளை மற்ற நிறுவனங்களும் எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. நிசான் நிறுவனத்தில் தற்போது வரை அமெரிக்காவில் 1420- க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், மெக்ஸிக்கோவில் 1000- க்கும் மேற்பட்ட ஊழியர்களையும், இந்தோனேசியாவில் 830 ஊழியர்களையும், ஜப்பானில் 880 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 6100 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிசான் நிறுவனம் முடிவு. மத்திய அரசு 2019-2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கு வரி சலுகை அளித்தது. இதனால் அனைத்து வாகன நிறுவனங்களும் "மின்சார வாகனத்தை" தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT