பாகுபலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மது பிரகாஷ். இவர் தெலுங்கு தொலைகாட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநிலம் துறை சார்ந்த பாரதி என்ற பெண்ணும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி பாரதி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி கேட்ட போது, மது பிரகாஷ் வீட்டிற்கு நேரத்திற்கு வராமல் இருந்தால் அவருக்கும் மனைவி பாரதிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Advertisment

actor

அதோடு, மது பிரகாஷுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெண் வீட்டிலிருந்து திருமணத்தின் போது 15 இலட்சம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.மேலும் அவர் தற்கொலைக்கு மது பிரகாஷ் அடிக்கடி வரதட்சணை கொடுமை செய்தது தான் காரணம் என புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரதியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.