Published on 22/07/2022 | Edited on 22/07/2022

ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துவதாக நடிகர் லால் தெரிவித்துள்ளார்.
தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்டத் திரைப்படங்களில் நடித்தவர் லால். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்கு பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், பண நெருக்கடி காரணமாக, அந்த விளம்பரத்தில் நடித்ததாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சனை வரும் என்றோ, ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ, தான் நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.