Famous actor  arrested at Chennai airport

Advertisment

பாலியல் புகாரில் சிக்கிய பிரபல கேரளநடிகர் துபாயிலிருந்து சென்னை வந்த பொழுது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளார்.

ஷியாஸ் கரீம் என்பவர் கேரளாவில் பிரபல நடிகர். பல்வேறு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் மீது அண்மையில் கேரளமாநிலம் கண்ணூர் காவல் நிலையத்தில் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டதாக பாலியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேரளாவின் கண்ணூர் காவல்துறையினர் இவரைப் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஷியாஸ் கரீம் தலைமறைவாக இருந்த நிலையில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானது. விசாரணையில் அவர் துபாய்க்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஷியாஸ் கரீம் துபாயில் இருந்து சென்னை வந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உடனடியாக கண்ணூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தற்பொழுது கண்ணூர் காவல்துறையினர் சென்னை விரைந்துள்ளனர். ஷியாஸ் கரீம் கண்ணூர் கொண்டு செல்லப்பட்டு இந்த வழக்கு தொடர்பாக முறையாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.