Skip to main content

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகை, இயக்குநரை தாக்கிய ரவுடிகள்! அதிர்ச்சி வீடியோ!

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

வெப் சீரீஸ் ஃபிக்சரில்  பிரபல பாலிவுட் நடிகை மாஹி கில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பேக்டரி ஒன்றில் நடந்து வருகிறது. ஷூட்டிங் நடத்த முறையாக அனுமதி பெற்று தான் ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் அங்கு வந்த ரவுடிகள் நடிகை மாஹி  மற்றும் துணை நடிகர்கள் இயக்குனர், உள்ளிட்டோரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தலையில் கட்டுடன் உள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

V v sad ! Violence on sets of #fixer

A post shared by Erk❤️rek (@ektaravikapoor) on


இந்த வெப் சீரியஸ் தொடரின் தயாரிப்பாளர் சாகேத் சாவ்னி நடந்ததை கூறும் போது மாஹி கில் அழுதுவிட்டார்.மேலும் இது பற்றி கூறும் போது அவர்கள் என்னை அடிக்கத் துவங்கியதும் நான் வேனுக்குள் ஓடிவிட்டேன். அவர்கள் செட்டில் இருந்தவர்களை மிருகங்களை போன்று அடித்தார்கள். எங்களை அடிக்குமாறு போலீசாரே அந்த ரவுடிகளிடம் தெரிவித்தனர். அதனால் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் போவது இல்லை என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.