Advertisment

கார் விபத்தில் சிக்கிய பிரதமரின் சகோதரர் குடும்பம்

The family of the Prime Minister's brother who was involved in a car accident

Advertisment

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி குடும்பத்துடன் பெங்களூர் வந்திருந்த நிலையில் அவரது கார் விபத்தில் சிக்கியதில் பிரகலாத் மோடி காயமடைந்துள்ளதாகத்தகவல்வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி அவரது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என 6 பேர் இன்று பெங்களூர் வந்திருந்தனர். மைசூருக்குச் சென்ற அவர்கள் பந்திப்பூர் வனவியல் பூங்காவிற்கு காரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். இதில் காயமடைந்த பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

brother modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe