Skip to main content

கழிவறையில் சமையல் செய்த குடும்பம்... வீடு இல்லாததால் நேர்ந்த அவலம்!

Published on 20/01/2020 | Edited on 21/01/2020

உ.பி-யில் ஒரு குடும்பத்தினர் கழிவறையை சமயலறையாக பயன்படுத்தி வரும் அதிர்ச்சி சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவருக்கு அங்கிதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளை சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
 

df



அப்போது ராம் பிரகாஷ் தனக்கு வழக்கப்பட்டிருந்த கழிவறையை சமையல் கூடமாக மாற்றி அதை பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்ததில், அவருக்கு வசிப்பதற்கு முறையான வீடு இல்லாத காரணத்தால் அவர் கழிவறையை வீடாக பயன்படுத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து அடுத்தகட்ட விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உள்ளேயா எட்டி பாக்குற... இதுதான் உனக்கு தண்டனை” - ஒற்றை பெண்ணாக செவிலில் விட்ட சம்பவம்  

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 "Ulleya Etti Pakkura... This is your punishment"- The incident of being a single woma

 

ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த போதை நபர் ஒருவரைப் பெண் ஒருவர் பிடித்துத் தாக்கி முகத்தில் மிளகாய்ப் பொடி வீசிய சம்பவம் நடந்துள்ளது.

 

ஈரோடு பேருந்து நிலைய பெண்கள் கழிப்பறைக்குள் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அங்கிருந்த துணிச்சல் மிகுந்த பெண் ஒருவர் மட்டும் அந்த போதை ஆசாமியைப் பிடித்து கன்னத்தில் பளார் பளார் என்று அறைவிட்டார். அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

வெளியான அந்த வீடியோவில் ''உன் அம்மா தங்கையும் பெண் தானே என ஆவேசமாகக் கேள்வி கேட்டுத் தாக்கிய அந்த பெண், மிளகாய்ப்பொடியை வாங்கி வந்து அந்த இளைஞரின் முகத்தில் கொட்டினார். அந்த இளைஞரோ அலறித் துடித்தார். பின்னர் அங்கு சாதாரண உடையில் பணியிலிருந்த பெண் போலீஸ், சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்று அந்த இளைஞரைப் பிடித்து பேருந்து நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆனால் போலீசார் அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஈரோடு பேருந்து நிலையத்தில் பெண்கள் கழிப்பறை பகுதியில் போதிய மின் விளக்குகள் இல்லாத நிலை இருப்பதால் இதுபோன்ற அச்சுறுத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறப்படுகிறது. உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

Next Story

''அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை'' - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பேட்டி

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

nn

 

நியாய விலை கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 

இன்று மதுரை மாவட்டம் கோச்சடையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''அடுத்த ஓராண்டிற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகளில் நியாய விலை பொருட்கள் மட்டும்தான் விற்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இலக்கோ அல்லது நியாய விலை அல்லாத பொருட்களையோ விநியோகிக்கக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். மீண்டும் இதை உங்கள் முன்னால் தெளிவுபடுத்தி விடுகிறேன்'' என்றார்.